தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஹிந்தி என ஒட்டு மொத்த   திரைப்படங்கள் ரிலீசான அடுத்த சில மணி நேரங்களில் ஹெச் டி பிரிண்ட்டை வெளியிட்டு திரையுலகை அதிர்ச்சியில் வைத்திருப்பது தமிழ்ராக்கர்ஸ், கடந்த சில வருடங்களாக புதிய படங்களை சவால் விட்டு புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு சினிமா தயாரிப்பாளர்களை அழவைத்து வருகின்றனர்.

அதேபோல, கடந்த வியாழக்கிழமை சுமார் 10000  தியேட்டரில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக  வெளியான 2.0 திரைப்படம்  படம் இரண்டு காட்சிகள் மட்டும் ஓடிய நிலையில் தமிழ்ராக்கர்ஸ் 2.0  திரைப்படத்தை ஹெச் டி பிரிண்ட்டை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இப்படி அச்சுறுத்தி  தமிழ்ராக்கர்ஸ் என்ற பிரபல பைரசி வெப்சைட்டின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கோவையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாராம். கைது செய்யப்பட்ட தமிழ்ராக்கர்ஸ் அட்மின் பெயர் மற்றும் விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்த ஒரு அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ஒட்டுமொத்த  சினிமா உலகமே குஷியில் உள்ளனர்.