A.R.Rahuman help with harward university tamil chair

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை பெறுவதற்காக மிகவும் போராடி தற்போது அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர் தமிழ் ஆர்வலர்கள்.

சமீபத்தில் இந்த இருக்கையைப் பெற தமிழக அரசு 9.75 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானும் தானாக முன்வந்து ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்கு உதவி செய்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கனடாவில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பாக பேசிய ஸ்ரீனிவாஸ் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி நிதி உதவி வழங்கப்போவதாக அறிவித்தார்.

பின் அதே மேடையில் கனடாவில் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிஷன் நித்தி, ஏ.ஆர்.ரகுமான், மற்றும் பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இணைந்து 25,000 டாலர் நிதியை ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் விஜய் ஜானகிராமனிடம் வழங்கினார். இந்திய ரூபாயின் படி இதன் மதிப்பு சுமார் 16 லட்சம்.