a.r.raguman birthday wishes for sachin

கிரிக்கெட் விளையாட்டு என்றவுடன் முதலில் அனைவர் நினைவுக்கும் வரும் விளையாட்டு வீரர் 'லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கர்' தான்.

இவர் நேற்று தன்னுடைய 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்தும் பல ரசிகர்கள் மற்றும், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில்' சச்சின்' வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படம் வரும் மே மாதம் 26ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கு 'ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்' இசையமைத்துள்ளார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் நேற்று சச்சின் பிறந்த நாளை முன்னிட்டு 'சச்சின்' படத்தின் ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான்' தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

பின்னர் சச்சினுக்கு அவர் கூறிய வாழ்த்து செய்தியில், 'இது சச்சின் படத்தின் முதல் பாடல். இந்த மண்ணின் தலைசிறந்த மகனுக்கு இதைப் பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

ரகுமானின் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட சச்சின் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'இந்த மண்ணில் பிறந்தது கடவுள் கொடுத்த வரம். உங்கள் பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் இனி ஒலிக்கும்' என்று கூறியுள்ளார்.