பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன்..! படப்பிடிப்பு துவங்கியது..!
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார். கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.
Gentleman 2: ஜென்டில்மேன் 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, கே. ஜி. எப் படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு... இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
தம்பி ராமையா மகன் உமாபதியை அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா காதலித்து வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பாக தந்தையின் இயக்கத்திலேயே ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். விரைவில் இவரின் திருமணம் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.