தளபதி விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 64 ஆகவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. விஜய் அப்பா - மகன் என நடித்து வரும் இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். மேலும் இந்த படத்தில் முதல் முறையாக விஜய், ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'வெறித்தனம்' என்கிற பாடல் ஒன்றையும் பாடி உள்ளார் என்கிற தகவல் ஓரிரு தினத்திற்கு முன் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

இந்த படத்தை தொடர்ந்து 'மாநகரம்' படத்தின் இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 64 ஆகவது படத்தை நடிக்க உள்ளது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில், முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடல், மங்காத்தா, இரும்புத்திரை ஆகிய படங்களில் தன்னுடைய அசத்தனான நடிப்பை வெளிப்படுத்திய, நடிகர் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து அவ்வப்போது, ஒரு சில தகவல் வெளியாகி வருகிறது.