தெறிக்க... முரட்டு வில்லனாக மிரட்டும் ஹரோல்டு தாஸ்.! 'லியோ' படத்தில் இருந்து வெளியான அர்ஜுனின் கிலிம்ஸி வீடியோ
ஆக்சன் கிங் அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, 'லியோ' படத்திலிருந்து அவருடைய கிலிம்ஸி வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் குறித்து, அடுத்தடுத்து பல சுவாரசிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது ஆக்சன் கிங் அர்ஜுனனின் 61-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய கதாபாத்திரமான ஹரோல்ட் தாஸ் கேரக்டரின் கிலிம்ஸி வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஏற்கனவே தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், அந்த படத்தை தொடர்ந்து.. இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் இணைந்து நடித்துள்ளார் விஜய். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர யோகி பாபு, கதிர், பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!
செவன் ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ள நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான விஜய்யின் 'நா ரெடி' பாடலின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இந்த படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு லியோ படத்தில் இவருடைய மாஸான கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாக... ஹரோல்ட் தாஸ் கேரக்டரின் கிலிம்ஸி வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மிரட்டல் வில்லனாக அர்ஜுன் நடித்திருப்பது இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ள நிலையில், பார்ப்பதற்கு... சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் டச் இவரிடம் உள்ளது பார்க்க முடிகிறது. மேலும் தெறிக்க என்கிற ஒரே.. ஒரு வார்த்தை மட்டுமே அர்ஜுன் பேசியுள்ளார்.
சுதந்திர தினத்தில் இரண்டாவது படத்தை உறுதி செய்த லெஜெண்ட் சரவணன்! வைரலாகும் செலபிரேஷன் வீடியோ!