Arjun about Vishal acting carrer

விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான இரும்புத்திரை படம் சக்கைப்போடு போடுகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ள
இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். கதாநாயகியாக சமந்தா, மனநல மருத்துவர் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது பேசிய அர்ஜூன், இந்த படத்தைப் பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கு என்னுடைய
கதாப்பாத்திரத்தைப் பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கு நன்றி தெரிவிததார்.

நானும், விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர்தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். என்னிடம் அசிஸ்டென்ட் டைரக்டராகவும் சேர்த்து
விட்டார். அசிஸ்டென்ட் டைரக்டராக வந்த விஷால், ஒரு முறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை காட்சி ஒன்றில் நடிக்க சொன்னே. விஷாலும், ட்ரையலுக்காக அதில் நடித்தார்.

அதைப் பார்த்ததும், விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதை நான் விஷாலுடைய தந்தையைச் சந்திக்கும்போது கூறினேன். அவரும்
விஷாலை வைத்து செல்லமே படத்தை தயாரித்தார். படம் வெற்றியும் பெற்றது.

நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான கதாநாயகனாக, தயாரிப்பாளராக, நடிகர் சங்க பொது செயலாளராக, தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார் என்றார். டைரக்டர் மித்ரன் குறித்து பேசும்போது, நான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும்போது, ஷங்கர் புதுமுக இயக்குநர்தான்... அதேபோல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார் என்று அர்ஜுன் கூறினார்.