Asianet News TamilAsianet News Tamil

’அமைதி, அமைதி...எப்பிடியாவது ‘பிகில்’ தீபாவளிக்கு வந்தே தீரும்’...தயாரிப்பாளரின் திக் திக் நிமிடங்கள்...

விஜய்க்கும் ஆளும் கட்சிக்கும் நடுவில் ‘பிகில்’ ரிலீஸ் சமயத்தில் பெரும்பஞ்சாயத்து நடக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்ததுபோலவே தொடர்ந்து சில காட்சிகள் மறைமுகமாக அரங்கேறி வருகின்றன. முதலில் சென்சார் அதிகாரிகள் படம் பார்ப்பதை தாமதப்படுத்தினர். பின்னர் 5 நாட்கள் கழித்து படம் பார்த்து சர்டிபிகேட் வழங்கிய அவர்கள் ‘மற்ற’பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துவிட்டே சென்சார் சர்டிபிகேட்டை வெளியிடவும் என்று அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனராம்.

archana kalpathi tweets about bigil release
Author
Chennai, First Published Oct 16, 2019, 11:46 AM IST

இரு தினங்களுக்கு முன்பே சென்சார் அதிகாரிகள் ‘பிகில்’படத்தைப் பார்த்து முடித்து சில கட்கள் கொடுத்து ‘யு/ஏ’சர்டிபிகேட்டும் வழங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர் வேறு சில பிரச்சினைகளால் அந்த சர்டிபிகேட்டை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதனால் கொதிப்படைந்துள்ள விஜய் ரசிகர்கள் ‘படம் குறித்த அப்டேட் என்ன ஆச்சு?’என்று கொதித்து வருகிறார்கள்.archana kalpathi tweets about bigil release

விஜய்க்கும் ஆளும் கட்சிக்கும் நடுவில் ‘பிகில்’ ரிலீஸ் சமயத்தில் பெரும்பஞ்சாயத்து நடக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்ததுபோலவே தொடர்ந்து சில காட்சிகள் மறைமுகமாக அரங்கேறி வருகின்றன. முதலில் சென்சார் அதிகாரிகள் படம் பார்ப்பதை தாமதப்படுத்தினர். பின்னர் 5 நாட்கள் கழித்து படம் பார்த்து சர்டிபிகேட் வழங்கிய அவர்கள் ‘மற்ற’பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துவிட்டே சென்சார் சர்டிபிகேட்டை வெளியிடவும் என்று அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனராம்.

அடுத்த நகர்வாக  பிகில் படத்திற்காக நள்ளிரவு 1 ஒரு மணிக்கு சிறப்பு காட்சிகள் போட அனுமதிக்கப்போவதில்லை என்று அரசு தரப்பிலிருந்து தகவல் அனுப்பப்பட்டிருக்கிறதாம். இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் தரப்பு ஆளும் தரப்பை சமாதானப்படுத்த எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடியவே டெல்லியில் பா.ஜ.க. மேலிடத்தைத் தொடர்புகொள்ள ஆரம்பித்திருக்கிறார்களாம். காரணம், படத்தின் பட்ஜெட் மிகப்பெரியதாக இருப்பதால், போட்ட பணத்தை திரும்ப பெற வேண்டுமானால், இதுபோன்ற அதிகாலை காட்சிகள் போட்டால் தான் முடியும், என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் போட வேண்டும், என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.archana kalpathi tweets about bigil release

 ஆனால், அரசு தரப்பில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது, என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்களாம். ‘பிகில்’ படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அரசு தரப்பில் இருந்து திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான அறிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த தகவலால் பிகில் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட்கள் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வருவதால் சற்றுமுன்னர் நிர்வாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,..’சென்சார் ஃபார்மாலிடிகள் முடிந்து விட்டன. விரைவில் பட வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம்’என்று ட்விட் செய்திருக்கிறார். அப்ப டீல் இன்னும் முடியல அப்படித்தானே மேடம்?

Follow Us:
Download App:
  • android
  • ios