சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளதால் தற்போது தமிழகமே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. கூவத்தூரை கடந்து செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அரவிந்தசாமி இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் நமது முதல்வர் தனது அலுவலகத்திற்கு சென்று தனது பணிகளை பார்க்கவிருப்பது ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு .

உடனடியாக அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களுடைய பணியை மக்களுக்காக செய்ய புறப்படுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதே போல் உங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களை பொதுமக்கள் அழைத்து பணியை செய்ய வற்புறுத்த வேண்டும். இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டிய நேரம் இது இல்லை.' என்று கூறியுள்ளார்.