'ரோஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற நடிகர் அரவிந்த்சாமி. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.

சில ஆண்டுகள் நடிப்புக்கு இடைவெளி விட்டு, தொழிலதிபராக மாறிய இவர், மீண்டும் இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய,  'தனி ஒருவன்' திரைப்படத்தின் மூலம் மாஸ் வில்லனாக ரீஎன்ட்ரி கொடுத்தார். 

இந்தப்படத்தில், ஹீரோவாக நடித்த ஜெயம் ரவியின் நடிப்பை விட வில்லனாக நடித்த, அரவிந்த் சாமியின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. ஒரே மாதிரியான கதை மற்றும் காதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்பாத அரவிந்த் சாமி தற்போது, 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்',' நரகாசுரன்', 'செக்க சிவந்த வானம்', உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருடைய மகன் ருத்திரசாமி ஐபி ப்ரோகிராம் பட்ட படிப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தன்னுடைய மகனை வாழ்த்தி ட்விட் செய்துள்ள அரவிந்த்சாமி 'எனது மகன் ஐபி ப்ரோகிராம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதை பெருமையாக நினைக்கிறேன். மற்றவர்கள் அடைந்த மையில் கல்லை நீயும் அடைய வாழ்த்துகிறேன். உன்னை சுற்றியுள்ள உலகத்தார் உன்னால் பயன் பெற வேண்டும். உன்னுடைய கனவுகள் அனைத்து நினைவாக வேண்டும்'. என ட்விட் செய்திருக்கிறார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து ருத்திரசாமிக்கு தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.