aravind samy request tamilnadu govenment

சமீபத்தில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, மத்திய அரசின் நீட் தேர்வு திணிப்பால் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பு படிக்க முடியாததை நினைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மாணவர்கள் அனைவருக்கும் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்வது என பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இந்தப் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிந்த நடிகர் அரவிந்த் சாமி, தமிழக அரசு நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவது மிகச் சிறந்த விஷயம். ஆனால் இந்தத் திட்டத்திற்கும் அம்மா என்று பெயர் வைக்காமல். அனிதா என்று பெயர் வையுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது மாணவி அனிதாவால் நிகழ்ந்த மாற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.