நடிகர் அரவிந்த் சாமி, 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்தாலும், கதாநாயகன் ஜெயம் ரவியை விட, அதிகம் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் அரவிந்த் சாமி, 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்தாலும், கதாநாயகன் ஜெயம் ரவியை விட, அதிகம் ரசிகர்களை கவர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடைசியாக இவர் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெளியாகியது. ஆனால், இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்பது சற்று சோகமான விஷயம் தான் இவருடைய ரசிகர்களுக்கு.

இருப்பினும், அடுத்த வருடம் இவர் நடிப்பில் கிட்ட தட்ட 6 படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், எம்.ஜி.ஆர்., வேடத்தில் நடித்து வருகிறார் அரவிந்த் சாமி. 

இந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது இவர், தன்னுடைய மீசை, தாடியை மழித்து கொண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ...