ரியல் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், சினிமாவிலும் குத்துசண்டை வீராங்கனையாக இயக்குனர் சுதா இயக்கத்தில், மாதவன் நாயகனாக நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானார். 

முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பால் பலரது கவனத்தையும் ஈர்த்ததால் அவரை தேடி பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. 

ரித்திகா சிங் குத்துசண்டை வீராங்கனையாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதி சுற்று படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது லாரன்சுடன் சிவலிங்கா படங்களில் நடித்துள்ளார். அந்த படங்களைத் தொடர்ந்து சில படங்களில் நடிக்க பேசி வந்தவர் தற்போது செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் .

மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் மட்டுமின்றி நடிகை சாந்தினியும் நடிக்கிறார். 

இவர்கள் தவிர மற்றுமொரு கதாபாத்திரத்திற்காக சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .

தனி ஓவருவன் வெற்றிக்கு பிறகு வில்லத்தனமான கதைகளில் கவனம் செலுத்தி வந்த அரவிந்த்சாமி, இந்த படத்தில் குடும்ப சூழல் கதையில் நடிக்கிறார். அடுத்த மாதம் 13-ந்தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அரவிந்த் சாமி.