aravid samy want president rule
அரவிந்த் சாமி பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது நாட்டு பற்றுடன் சில விஷயங்களை சமூக வலைத்தளம் மூலம் முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வட மாநிலங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள 'பத்மாவத்' திரைபடத்தை ரிலீஸ் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட பல மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

இதில் அரசு பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் வன்முறையை தடுக்க தவறியதாக நான்கு மாநில அரசுகள் மீது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த் சாமி, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில், சமாதானத்திற்கு இடமில்லை. நிர்வாக திறமையின் தோல்விக்கு இதைவிட ஒரு காரணம் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
