பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலர்ந்த ஓவியாவின் காதல், அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறியும்  தொடர்கிறது. இதற்கு ஆதாரமாக அவர் தன்னுடைய ரசிகர்கள் மத்தியிலும் சரி, கமலின் முன்பும் சரி  நான் ஆரவை இப்போதும் காதலிக்கிறேன் ஐ லவ் ஆரவ் என கூறினார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட ஆர்த்தி மீண்டும் வீட்டிற்குள் வந்து ஓவியாவின் காதலுக்கு ஆதரவாக பேசுகிறார். 

தீடீர் என ஆரவிடம் நீங்கள் 100 நாட்கள் கழித்து இங்கிருந்து வெற்றி பெற்று வெளியே செல்லும் போது உங்களிடம் ஓவியா காதலிப்பதாக கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என ஆர்த்தி கேட்டார்.  அதற்கு ஆரவ் இந்த கேள்வியை தவிர்ப்பது போல் எழுந்து நின்று ஏன் இதை பற்றியே அனைவரும் பேசுகிறீர்கள் என கூறி சலித்துக்கொண்டார்.

உடனே ஆர்த்தி, இந்த வீட்டை விட்டு வெளியேறி இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நான் பார்த்த போது மிகவும் வருத்தமாக இருந்தது என கூறுகிறார். மேலும் ஒரு பெண் தைரியமாக ஒரு நிகழ்ச்சியில் உங்களை காதலிப்பதாக கூறுகிறார், அவருடைய எதிர்காலம், வேலை என எதையும் பார்க்காத போது நீங்கள் அனைத்தையும் பற்றி யோசிக்கிறீர்கள் என ஆரவிடம் பல கேள்விகள் எழுப்பினார்.

உடனே ஆரவ் நான் அதையெல்லாம் யோசிக்க வில்லை என்றும், தன்னுடைய குடும்பம் அப்பா, அம்மா, பற்றி யோசிப்பதாகவும் கூறுகிறார்.  உடனே காஜல், அப்போ இந்த நிகழ்ச்சியை பார்த்து உங்கள் அப்பா, அம்மா, சம்மதித்தால் திருமணம் செய்துக்கொள்வீர்களா என கேட்டபோது அதை அப்போது பார்போம் என கூறி அந்த இடத்தை விட்டு நழுவினார் ஆரவ்.