பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆரவ், பிக் பாஸ்ஸை விமர்சித்து பேசுவது போல் உள்ளது, மேலும் ஒருவரை  ட்ரிகர் பண்ணவேண்டும், ஒருத்தருக்கு ஸ்ட்ரெஸ் உண்டாக்க வேண்டும் என்பதற்காக பொய்யான விஷயங்களை போட்டுக்காட்ட வேண்டாம் என்கிறார்.

மேலும் நான் மன்னிப்பு கேட்டேன், என்பதை அங்கு சொல்லுகிறேன்... பின் எப்படி நான் மன்னிப்பு கேட்கவில்லை என சொல்லப்படும் என குரலை உயர்த்தி பேசுகிறார். 

இவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகர் கமலஹாசன்... ஆரவிடம் நீங்கள் பேசும் வார்த்தைகளை மாற்றி திரித்து பொய்யாக காட்டப்படுவதில்லை என்றும் உங்களுக்காக ஒரு குறும்படம் போட உள்ளதாகவும் கூறுகிறார்.

இப்படி போடப்பட்டால், பலர் ஆரவை அடுத்த ஜூலி என கிண்டல் செய்யவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.