பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக சமீபத்தில் இணைந்தவர் நடிகை பிந்து மாதவி. உள்ளே வந்த உடன் தனக்கு பிடித்தவர் ஓவியா என்று அவருக்கு கொடுத்த எண்கள் மூலம் அனைவருக்கும் சுட்டி காட்டினார்.

தற்போது ஆரவை காதலிப்பதாக ஓவியா சுற்றி வந்தாலும், ஆரவ் எப்படி ஓவியாவை கழட்டி விடுவது என்பதில் மற்றுமே குறியாக இருக்கிறார். 

இந்நிலையில் ஓவியாவிடம் வந்து பேசும் பிந்து... ஏன் உனக்கு இதெல்லாம், இரவு நேரமெல்லாம் தூங்காமல் அவஸ்தை படுகிறாய்... நீ தான் நிஜமாக காதலித்திருக்கிறாய். ஆனால் ஆரவ் உண்மையாக இல்லை அவர் நடிக்கிறார் என தோன்றுகிறது என ஓவியாவிற்கு உண்மையான தோழியாக ஆறுதல் கூறுகிறார்.

இதற்கு ஓவியா ஆமாம் என் மேல் தான் தவறு என கூறி, அழுவது போல் செய்கிறார்... உடனே பிந்து அழவேண்டாம் யோசித்து பார் என கூறி ஓவியாவுக்கு ஆதரவாக துணை நிற்கிறார்.