arav intro the hero in famous director movie
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓவியாவின் காதல் சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக பிக் பாஸ் டைட்டிலையும் வென்றவர் ஆரவ்.
பல விளம்பரப்படங்களில் மாடலாக நடித்துள்ள இவர், கடந்த வருடம் வெளியான சைத்தான் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு திரைப்படங்கள் பலவற்றில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் அண்மையில் இவர் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்த போது, இவர் அடுத்து மணிரத்னம் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு நடித்த சூப்பர் ஹிட் படமான 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணனின் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும் இந்தப் படத்தை விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாகவும் ஆரவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருவதாகவும் விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்றுப் எதிர்பார்க்கப்படுகிறது.
