பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஒரு வாரத்திலேயே, ஓவியா... ஆரவை பார்த்து நாம காதலிக்கலாமா... என விளையாட்டாக ஆரபித்து பின் அதுவே ஓவியாவுக்கு வினையாக முடிந்தது.

ஓவியா உண்மையாக ஆரவை காதலித்த போது ,தன்னுடைய குடும்பம் மற்றும் ஒரு சில காரணங்களால், இவரை காதலிக்க மறுத்துவிட்டார் ஆரவ். பின் ஒரு நிலையில் மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேறினார் ஓவியா.

இந்நிலையில் ஆரவ்வின் அண்ணன் நதீம், சமீபத்தில் ஆரவ் மற்றும் ஓவியா குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

நதீம் பேசுகையில், ஆரவ்க்கும் எனக்கும் 10 வருட இடைவெளி. அவனை  நான் தம்பியாக பார்த்ததை விட ஒரு பிள்ளையாகத்தான் பார்த்திருக்கிறேன்.  

மேலும் ஆரவ் மேல் வைத்திருந்த காதல் தோல்வியடைந்ததால் தான்   ஓவியா போனார் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
சக்தி, காயத்திரி போன்றவர்களால் தான் வெளியேறினார். பல சமயங்களில் ஓவியாவுக்கு  பக்கபலமாக இருந்தது ஆரவ் தான்.

ஆரவை பொறுத்தவரை தனக்கு எந்த வாழ்க்கை துணை வேண்டும் என்று முடிவு செய்வது அவனுடைய விருப்பம்,  அதில்  நான் கருத்து சொல்ல முடியாது.

யாரை அவன் ஓகே செய்கிறானோ,  நாங்கள் சம்மதம் தெரிவிப்போம். ஓவியா எங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தாலும் அதனை முழுமனதோடு ஏற்போம் என்று கூறினார்.

மேலும் ஆரவிற்கு நிறைய எதிர்விமர்சனங்கள் இருந்தாலும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அவர் வெற்றி பெறுவார் என நதீம் தெரிவித்தார்.