Arav|ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ள மகிழ்ச்சி செய்தியை பிக்பாஸ் பிரபலம் ஆரவ் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸின் முதல் சீசனின் மொத்த பரபரப்புக்கும் காரணமானவர் ஓவியா-ஆரவ் தான். இவர்களின் காதல், தற்கொலை முயற்சி, மருத்துவ முத்தம் என மொத்த எபிசோடுகளும் விறுவிறுப்பாக இருந்தது. அந்த சீசனில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்களும் ஆரவ் - ஓவியாவும் தான். இவர்களுக்கென தன ஆர்மியே உருவானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

காதல் தோல்வி காரணமாக தற்கொலை முயற்சி செய்ததால் ஓவியா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து முதல் சீசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட ஆரவ் இந்த வெற்றிக்கு பிறகு பட நயகனாக ராஜபீமா , மார்க்கெட் ராஜா எம்.பி.பி.ஸ், சைத்தான், ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் இருந்து வெளியே வந்த பிறகு தான் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார் ஆரவ். இதை தொடர்ந்து ஓவியா, ஆரவ் இருவருமே படப்பிடிப்புகளில் பிஸியாகி விட்டனர். 

பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ராஹேன் என்பவரைஆரவ் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அண்மையில் ராஹேனுக்கு சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த படங்கள் போதிய வெற்றியை பெற்று தரவில்லை என்றே சொல்லலாம். 

இந்நிலையில் இன்று ஆரவ் தந்தையான நற்செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட ஆரவ் ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளதாகவும். தாயும் சேயும் நலம் உங்களது அன்பும் ஆசிர்வாதமும் அவர்களுக்கு வேண்டும் என கூறியுள்ளார்.