பட்டிமன்ற, பேச்சாளராக தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா... இவர் காமெடி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தூண்டுதலாக அமைந்தது இவரின் கலகலப்பான பேச்சுதான். 

'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னுடைய கலக்கலான காமெடி திறமையால், டைட்டில் வென்றார். 

பொதுவாக திருமணத்திற்கு பின் பெண் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கணவர்கள் விரும்பும் நிலையில், தன்னுடைய மனைவியின் திறமையை அறிந்து அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார் நிஷாவின் கணவர். 

அதே போல் இவர் ஷூட்டிங் மற்றும் பட்டிமன்ற நிகழ்சிகளுக்கு செல்லும் போது, தன்னுடைய மருமகளை மகளாக நினைத்து இவருக்கு இன்றுவரை உதவியாக இருந்து வருபவர் அவருடைய மாமியார் தான். 

நிஷா தற்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்... இந்நிலையில் தன்னுடைய கணவர் பற்றி மனம் திறந்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில் என் கணவர் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர். அவரைப் போல் தன்னை புரிந்துக்கொண்டவர் யாரும் இல்லை. அதே போல் சில வேலைகள் காரணமாக வீட்டிற்கு வர நேரம் ஆனாலும் என்னை அவர் எந்த கேள்வியும் இதுவரை கேட்டதில்லை. 

அதிகாலை 3 மணிக்கு கூட நிகழ்ச்சி சம்மந்தமாக எனக்கு போன் வரும். அப்போது செல்போனை கொடுத்து உனக்கென தனிப்பட்ட விஷயம் இருக்கும் நீயே பேசு என கூறுவார். 

அந்த அளவிற்கு என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் அவர் மதிப்பளிப்பர்... என் கணவர் கடவுள் தந்த வரம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நிஷா.