aramtangi nisha acting dhanush movie

அறந்தாங்கி நிஷா

கலக்கப்போவது மூலம் புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா.இவரையும், பழனியையும் டிவியில் பார்த்தாலே குபுக்கென்று சிரிப்பு வந்து விடும். அறந்தாங்கி நிஷா ஸ்டேண்ட் அப் காமெடி செய்வதில் வல்லவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற இவர் தற்போது வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடி செய்து வருகிறார்.

வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் வந்தால் போதும் சுலபமாக வெள்ளித்திரைக்குள் நுழைந்து விடலாம் என்ற கருத்து உண்டு. சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், பிரியா பவானிஷங்கர் போன்றவர்கள் சிறந்த உதாரணம். அந்த வரிசையில் இப்போது, அறந்தாங்கி நிஷா இணைந்திருக்கிறார். 

சமீபத்தில் இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து, எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீனா

சிறிது நாட்களுக்கு முன்பு "கலக்கப்போவது யாரு" தீனாவுடன் இணைந்து தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.அதன்படி தனுஷின் தயாரிப்பில் தீனா ஹீரோவாக நடிக்க போவதாக செய்திகள் வெளியாயின.

அந்த லிஸ்ட்டில் தற்போது நிஷா இணைந்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.