ரசிகர்களை கவர்ந்து வரும் பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட பூஜா ஹெக்டேவின் இன்டெர்வ்யூ மற்றும் சாங் மேக்கிங்கை வெளியிட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த பீஸ்ட் :
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஷாப்பிங் மாலை ஹேஜேக் செய்த தீவிரவாதிகளிடம் இருந்து எவ்வாறு விஜய் மக்களை காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதையாகும் . விஜய் ரசிகர்களை பொறுத்த வரை படம் வெற்றியடைந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது.
க்யூட் பூஜா ஹெக்டே :
விமர்சகர்கள் விஜயை காட்டிலும் பூஜா ஹெக்டேவை அதிகமாக பாராட்டி வருகின்றனர். அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட படல்களில் பூஜாவின் நடனம் மிகவும் பேமஸ் ஆனது. அதோடு இந்த படத்தில் அவரது டைமிங் காமெடியும் பக்காவாக ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்தில் பெரிதும் பேசப்படாத நாயகி பீஸ்ட் மூலம் மிகவும் அறியப்பட்ட ஹீரோயின்ஸ் பட்டியலில் சீட் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

பிரமாண்ட பட்ஜெட்டில் பீஸ்ட் :
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 175 கோடியில் உருவாகியுள்ளது..இந்த படம் 5 மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த 13-ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விமர்சங்களை பொறுத்தவரை கலவையான விமர்சங்களையே பெற்றுள்ளது. அதோடு பெரும்பாலான திரையரங்குகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஹவுஸ் புல் போர்ட் வைக்கப்பட்டது.

பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த வரவேற்பு :
முதல் ஷோவுக்கு நேரில் திரையரங்கு வந்த பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் செம்ம குஷியில் வரவேற்பு அளித்துள்ளனர். செண்டை மேளத்துடன் தேவதை போல நாயகி வந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடினர். இந்நிலையில் ப்ரோமோஷனுக்காக பூஜா ஹெக்டேவுடன் நடத்தப்பட்ட நேர்காணல் குறித்த வீடியோவையும், அரபிக் குத்து பாடல் மேக்கிங் வீடியோவையும் சன்பிக்சர்ஸ் ரிலீஸ் செய்துள்ளது.

