ar rahuman brand ambassador for sikim government

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிக்கிம் முதலமைச்சர் முக்கிய பதவி ஒன்றை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு அவரது புகழ் உலகம் முழுவதும் மேலும் பரவி வருவதை பறை சாற்றுவது போல் அமைந்துள்ளது.

இசையின் மூலம் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது முதல் பல்வேறு விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமானை கௌரவிக்கும் விதத்தில் சிக்கிம் மாநில முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் நேற்று நடைபெற்ற குளிர்கால திருவிழாவில் ஏ.ஆர்.ரகுமானை சிக்கிம் மாநில விளம்பர தூதராக அறிவித்துள்ளார். 

இந்த விழாவில் பேசினார், முதலமைச்சர் பவன்குமார். ஏ.ஆர்.ரகுமானைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர், உங்களை சிக்கிம் மாநிலத்தின் விளம்பர துதராக நியமிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். உடனே, இன்ப அதிர்ச்சி கொண்ட ஏ.ஆர்.ரகுமான் பின்னர் முதல்வரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். இதை அடுத்து, தான் அளித்த விளம்பர தூதர் பதவியை ஏ.ஆர். ரகுமான் ஏற்றுக்கொண்ட தற்காக, அவருக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர்.

பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், தனக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னை கௌரவப் படுத்தும் விதமாக, மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் சகிப்புத்தன்மை, அமைதி,

ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்றும் சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒன்றாகப் பாடுபடுவோம் என்று கூறியதுடன் விரைவில் சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக அவர் 

ஒரு பாடலை கம்போஸ் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.