A.R Rahman Lal Salaam : பிரபல இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கான இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், மற்றும் விழாவின் நாயகன் ரகுமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக்க கழுகு கதை குறித்து தெளிவுபடுத்தியது அவரது பேச்சின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அந்த படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் "திமிறி எழுடா" என்ற பாடல் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த பாடலில் இதுவரை தமிழ் சினிமாவில் கையாளப்படாத ஒரு யுத்தி தொழில்நுட்பத்தின் உதவியால் சாத்தியமாகியுள்ளது. இறந்துவிட்ட இரு மாபெரும் இசையமைப்பாளர்களின் குரல் இந்த பாடலில் இணைக்கப்பட்டுள்ளது.
Timeless Voices AI என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன பிரபல பாடகர் ஷாஹுல் ஹமீது மற்றும் அண்மையில் மரணித்த பாடகர் பம்பா பாக்கிய ஆகிய இருவரின் குரல் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஒரு தெளிவான விளக்கத்தை லால் சலாம் படத்தின் இசையமைப்பாளர் ரகுமான் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், ஷாஹுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கிய ஆகிய இருவருடைய குடும்பத்தாரை அணுகி, தேவையான அனுமதி பெற்ற, பாடலுக்கான தொகையையயும் குடும்பத்தாரிடம் கொடுத்த ஒப்புதல் வாங்கியே இதை செய்துள்ளோம் என்றார் அவர்.
மேலும் தொழில்நுட்பம் என்பது முறையாக பயன்படுத்தினால் நிச்சயம் யாருக்கும் தீங்கு விளைவிக்காது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். லால் சலாம் படத்தில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
