Asianet News TamilAsianet News Tamil

Rotterdam சர்வதேச திரைப்பட விழா.. திரையிடப்படும் விடுதலை பாகம் 1 மற்றும் 2.. அது எப்படி? - சுவாரசிய தகவல் இதோ!

Viduthalai Screening : வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் Rotterdam சர்வதேச திரைப்பட விழாவில் இம்மாத இறுதியில் திரையிடப்படவுள்ளது.

Vetrimaaran viduthalai movie part 1 and part 2 screening in Rotterdam international film festival ans
Author
First Published Jan 29, 2024, 10:35 PM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் "விடுதலை". இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் திரையுலகில் களமிறங்கினார் சூரி என்றால் அது மிகையல்ல. பிரபல நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று அசத்தியிருந்தார். 

இயக்குனர் கௌதம் வாசுதேவன், நடிகர் சேத்தன் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் விடுதலை திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் Rotterdamல் ஒரு சர்வதேச திரைப்பட விழா நடக்கவுள்ளது. 

நெதர்லாந்து நாட்டில் உள்ள அந்த இடத்தில் வருடம் தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வருகின்ற ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு இடையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான முன்பதிவு ட்டிக்கட்டுகளும் தற்பொழுது விற்பனையாகி வருகின்றது. 

ஆனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு பணிகளே இன்னும் முடியாத நிலையில், அது எப்படி வெளியாகும் என்கின்ற ஒரு சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் தொடர்புடைய பல காட்சிகளை ஒன்றிணைத்து, எடிட் செய்யப்பட்டு ஒரே பாகமாக அந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

வெற்றிமாறன் திரைக்கதையில் உருவாகும் கருடன் என்ற திரைப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios