கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற்று வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.


 
இதில் மேலும் விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர் உள்ளிட்டோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 400 கோடி செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்ட தயாரித்து வருகிறது. மற்ற படி கதாபாத்திரங்களின் கெட்டப்பு மற்றும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் எதுவும் கசிந்துவிடாதபடி படக்குழு ரகசியம் காத்து வருகிறது. 

இதையும் படிங்க: இடையழகை காட்டி இளசுகளை ஏக்க பெருமூச்சு விட வைத்த யாஷிகா ஆனந்த்... ஆங்கில பத்திரிகைக்காக படுகவர்ச்சி போஸ்...!

பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் பிரபல நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது. எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத், கலை தோட்டா தரணி, ஒளிப்பதிவு ரவி வர்மன், வசனம் ஜெயமோகன் என டெக்னிக்கல் சைடும் செம்ம மாஸான டீம் களம் இறங்கியுள்ளது. 

இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனம் காட்டும் விஜய் - விஜய் சேதுபதி... தெறிக்கவிடும் "மாஸ்டர்" மூன்றாவது லுக்...!

இந்நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களிடையே படம் குறித்த  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த டுவிட்டர் பதிவில் பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்களை ரவி வர்மன் என்னிடம் காட்டினார், எல்லாம் செம மாஸாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் இதோ....