ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி. வரும் 2019 ஜூன் மாதம் வாக்கில் ஷாருக்கானை கதாநாயகனாகக் கொண்டு ஒரு இந்திப்படம் இயக்கவிருக்கிறார் இசைப்புயல். இந்தத் தகவலை எப்படியோ மோப்பம் பிடித்த ஹாக்கி சம்மேளனம், இதே கூட்டணியை தங்கள் விளம்பரப்படம் ஒன்றுக்கு மிக விவரமாக பயன்படுத்திக்கொண்டது. 

ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த, தனது அடுத்த படம் குறித்த கதை விவாததத்தில்  ஏ.ஆர்.ரகுமானை அணுகியது. அவர் மனப்பூர்வமாக சம்மதித்ததால் அவரது  இசையில் ஒரு பாடல் ஒன்றை வெளியிட ஒரிசா அரசு முடிவு செய்தது. இந்திப் பாடலாசிரியர் குல்சார் பாடல் வரிகளில் ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான இசை வீடியோவை ரகுமானே இயக்குகினார். 

‘ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் அவரது ஹீரோவான இந்தி நடிகர் ஷாருக் கான் நடித்தார். இதற்கான படப்பிடிப்பு புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்தது. ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் முதன்முறையாக நடித்ததை மகிழ்வாகப் பகிர்ந்து வருகிறார் ஷாருக்கான். இதே கூட்டணி பெரிய திரையில் காலடி எடுத்துவைப்பதற்கான டீஸர் என்று இந்த விளம்பரப்படத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.