இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இல்லத்தரசிகள் முதல் வயதான பாட்டி வரை பலரது நடிப்பு திறமையையும் வெளியே கொண்டு வந்தது டிக்-டாக் செயலி. இதன் மூலம் பிரபலமான ஆயிரக்கணக்கானோரில் கேப்ரியலாவும் ஒருவர். கடிதம் மூலம் மெசேஜ் சொல்லும் இவருடைய டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியவில் மிகவும் பிரபலம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

அதன் பின்னர் காஞ்சனா 3 படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியலாவிற்கு ஐரா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் சின்ன வயது நயன்தாராவாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சன் தொலைக்காட்சியில் 'சுந்தரி' என்கிற சீரியல் மூலம் ஒட்டு மொத்த இல்லத்தரசிகளும் கவர்ந்துள்ளார்.

கலெக்டராகும் கனவுகளுடன் போராடும் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சுந்தரி என்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்த சீரியல் இவருக்கு இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது. இவர் தற்போது, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் எடுத்து கொண்ட, புகைப்படத்தை இசைப்புயல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதே போல், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, மாஸ்டர், உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பூவையாருடனும் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.


View post on Instagram
View post on Instagram