Asianet News TamilAsianet News Tamil

’என் உடை என் சுதந்திரம்...அப்பா ஏ.ஆர். ரஹ்மானை இதில் வம்பிழுக்க வேண்டாம்’ குமுறும் இசைப்புயலின் மகள்...

‘நான் நன்கு வளர்ந்த சுயமுடிவுகள் எடுக்கத்தெரிந்த பெண். நான் என்ன விதமாய் ஆடை அணியவேண்டுமென்பதிலெல்லாம் என் அப்பா ஏ.ஆர்.ரஹ்மான் தலையிடுவதில்லை’ என்று மிகவேகமாக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு அவசர அவசரமாக பதில் அளித்திருக்கிறார் கதீஜா ரஹ்மான்.

AR Rahman's daughter Khatijas statement
Author
Chennai, First Published Feb 7, 2019, 12:59 PM IST

‘நான் நன்கு வளர்ந்த சுயமுடிவுகள் எடுக்கத்தெரிந்த பெண். நான் என்ன விதமாய் ஆடை அணியவேண்டுமென்பதிலெல்லாம் என் அப்பா ஏ.ஆர்.ரஹ்மான் தலையிடுவதில்லை’ என்று மிகவேகமாக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு அவசர அவசரமாக பதில் அளித்திருக்கிறார் கதீஜா ரஹ்மான்.AR Rahman's daughter Khatijas statementநேற்று முன் தினம் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் புர்கா அணிந்துகொண்டே மேடையேறியது பெரும் சர்ச்சையாக மாறி வைரலாகி வருகிறது. பழமை வாதத்தில் மூழ்கிப்போன ரஹ்மான் தன் மகளை வற்புறுத்தி அப்படி ஆடை அணிய வைத்திருக்கிறார் என்ற வசைகள் வரிசை கட்டின.

அதற்கு பதிலளித்து தனது குடும்பத்தினருடன் ஒரு ட்வீட் போட்ட ரஹ்மான் ’ஃப்ரீடம் டு சூஸ்’ என்ற ஹேஸ்டேக்குடன் தனது இளைய மகளும் மனைவியும் புர்கா அணியாமல் நீது அம்பானியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அப்போதும் சர்ச்சைகள் ஓயவில்லை.AR Rahman's daughter Khatijas statement

அதை ஒட்டி சற்றுமுன்னர் நீண்ட பதிவுடன் ஒரு விளக்கம் வெளியிட்டிருக்கும் ரஹ்மானின் மகள்,’ புர்கா அணிந்து அந்த மேடையில் தோன்றவேண்டும் என்பது முழுக்க முழுக்க சுய நினைவுடன், மிகுந்த விருப்பத்துடன் நான் எடுத்த முடிவு. என் ஆடை என் உரிமை. இது குறித்து விமர்சிக்கவோ அப்பாவை இந்த சர்ச்சையில் இழுத்து விடுவதையோ நான் கொஞ்சமும் விரும்பவில்லை. தயவு செய்து சூழ்நிலையைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்ற செய்தியுடன் ரஹ்மான் போட்ட  ’ஃப்ரீடம் டு சூஸ்' என்ற அதே ஹேஸ்டேக்கையே இணைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios