Asianet News TamilAsianet News Tamil

Simbu : சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக இணைந்த ‘எந்திரன்’ காம்போ - வெளியானது வேற மாறி அப்டேட்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்த நிலையில், 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது.

ar rahman reveals new update of vendhu thaninthathu kaadu
Author
Tamil Nadu, First Published Dec 7, 2021, 9:55 PM IST

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்த சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். இப்படத்துக்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ள சிம்பு, தன்னுடைய பாணியில் இருந்து சற்று மாறி, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை காயடுலோஹர் நடிக்கிறார்.

ar rahman reveals new update of vendhu thaninthathu kaadu

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்த நிலையில், 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது. இதற்கான அப்டேட்டை இன்று காலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் மேலும் ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.

ar rahman reveals new update of vendhu thaninthathu kaadu

அதன்படி, வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் மற்றும் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் ஆல்பத்தின் இசை உரிமையை அந்நிறுவனம் கைப்பற்றுவது இது மூன்றாவது முறை. இதற்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த எந்திரன் படம் மற்றும் நவரசா வெப் தொடர் ஆகியவற்றின் உரிமையை அந்நிறுவனம் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios