Ponniyin selvan : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் பொன்னியின் செல்வன் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனராக விளங்குபவர் மணிரத்னம். பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து இவர், தற்போது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனமும், மணிரத்னத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. அதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் போன்ற படங்களை மிஞ்சும் அளவுக்கு இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது.
இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Yashika Hot :கழுத்தில் மாட்டி இருக்கும் தம்மாதூண்டு கயிறு தான் பேலன்ஸ்! முரட்டு கவர்ச்சியில் மிரள விட்ட யாஷிகா
