பிரபலங்களின் பிறந்தநாளை மேலும் சிறப்பாக்கும் வகையில், அவர்களது காமன் டிபி உருவாக்கப்பட்டு வெளியாவது வழக்கமாகி வரும் நிலையில், தற்போது ஆஸ்கர் நாயகர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இவரது காமன் டிபியை பல பிரபலங்கள் ஒன்று சேர்ந்து வெளியிட்டு, அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ரோஜா படத்தில் துளிர் விட்ட, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை, ரசிகர்கள் மனதை பூரிக்கவைக்கும் பல பாடல்களால் தற்போது வரை நனைத்து வருகிறது.  இந்த இசை நாயகனின் பிறந்தநாள், நாளை ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இதனை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் ஒன்று சேர்ந்து அவரது, காமன் டிபி போஸ்டரை தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துவருகின்றனர்.

நடிகர் பார்த்திபன், இயக்குனர் வெட்கட் பிரபு, இயக்குனர் மோகன் ராஜா, சசி குமார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சினேகன், பாடலாசிரியர் விவேக், என சுமார் 50 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். 

இந்த காமன் டிபியில் ‘நான் இந்த உயரத்தில் இருக்க என்னுடைய அம்மாவே காரணம்’ என்று ஏ.ஆர்.ரகுமான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.  இந்த அசத்தலான காமன் டிபி போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு பலர் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள காமன் டிபி இதோ...