உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த முஸ்லிம் மத மாநாட்டில் பங்கேற்ற தாய்லாந்து, இந்தோனேஷிய பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனா அச்சத்தால் வீட்டில் அடைந்து கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் சோசியல் மீடியா மூலமாக பதிவிட்டு வருகின்றனர். கொரோனா விவகாரத்தில் இதுவரை மெளனம் காத்து வந்த ஏ.ஆர்.ரகுமான் முதல் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க:  “குட்டி பப்பு”வுக்கு பெயர் வச்சாச்சு... செல்ல மகளின் புகைப்படத்துடன் அறிவித்த ஆல்யா மானசா....!

அதில்,  “இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற மனதுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க  அவர்கள் தயாராக உள்ளனர். இதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். உலகத்தை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது”

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

“கடவுள் நம் அனைவரது இதயத்திற்குள் இருக்கிறார். எனவே மத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவந்து குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல.  அரசாங்கம் சொல்லும் அறிவுரைகளை கூறுங்கள். சில வாரங்களுக்கான சுய தனிமை உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கான வாழ்க்கையை கொடுக்கலாம். நீங்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக இருக்காதீர்கள். சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இந்த நோய் உங்களுக்கு வருவதற்கு முன் எந்த எச்சரிக்கையும் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கருத வேண்டாம். சிந்தனையுடன் இருப்போம். பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை நம் கையில் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.