சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

நடிகை நயன்தாரா, சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்கு பின் போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டும் சூப்பர் ஸ்டாரை வரும் ஜனவரி 9 ஆம் தேதி, திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.

தற்போது இந்த படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்கிற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு, இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ள ட்விட்டில்,  ராக்ஸ்டார் ஆக்ஷனில் இறங்கி விட்டார். தர்பார் பின்னணி இசை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். 

அந்த ட்விட் இதோ...