சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன், படம் நல்ல படியாக துவங்க வேண்டும் என்கிற பிராத்தனையோடு, பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.  

ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 166' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். 

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு மும்புரமாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தொடங்கும் முன் பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்ற ஏ.ஆர்.முருகதாஸ், படம் நல்லபடியாகயாக உருவாகி, வெற்றி பெற வேண்டும் பிராத்தனை செய்துள்ளார். 

நெற்றியில் சந்தன பட்டையுடன் கோவில் அர்ச்சகர்களோடு ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.