’ஓவர் பப்ளிசிட்டி உடம்புக்கு ஆகாது என்று நினைத்தாரோ என்னவோ, இனிமேல் ‘சர்கார்’ படம் குறித்து யாரும் வாயைத் திறந்து பேசக்கூடாது.

’ஓவர் பப்ளிசிட்டி உடம்புக்கு ஆகாது என்று நினைத்தாரோ என்னவோ, இனிமேல் ‘சர்கார்’ படம் குறித்து யாரும் வாயைத் திறந்து பேசக்கூடாது. அப்படிப்பேசினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இயக்குநர் முருகதாஸ் எரிச்சலோடு எச்சரித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

’சர்கார்’ ஆடியோ வெளியீட்டுக்குப்பின், இந்தச் செய்தி உட்பட, சலிப்புத் தட்டுமளவுக்கு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. போதாக்குறைக்கு அப்படத்தில் பணியாற்றிய ஜூனியர் ஆர்டிஸ்டுகள், குட்டி குட்டி டெக்னீஷியன்கள் தங்கள் அனுபவங்களை முகநூல், ட்விட்டர்களில் கொட்டித்தீர்க்கின்றனர்.

இதைக்கண்டு வெறுப்படைந்த ஏ.ஆர்.முருகல்தாஸ், ‘போதும் இத்தோட நிறுத்துங்க உங்க ‘சர்கார்; சங்கதிகளை, இல்லைன்னா போலீஸைக்கூப்பிடுவேன்’ என்கிற ரீதியில் கோபமாக ஒரு ட்விட்டைத் தட்டியிருக்கிறார்.

அதற்கு ரியாக்‌ஷனாக அவருக்கு வந்திருக்கும் பதில்களைப் படிக்க ஒரு பாறாங்கல் நெஞ்சம் வேண்டும் நீங்களே பாருங்க பாஸ்!


Scroll to load tweet…