AR Murugadas will not even expect that Anirud will do such a thing ...

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் என்று ஏ.ஆர்.முருகதாஸ், அனிரூத்திடம் சொன்னபோது நான் விஜய்க்காக 12 டியூன்களை போட்டு தயாராக வைத்திருக்கிறேன் என்று கூறி ஏ.ஆர்.முருகதாஸை அதிரச் செய்துள்ளார்.

நடிகர் விஜய் ‘மெர்சல்’ படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் இருவரும் சந்தித்துப் பேசியபோது, நடிகர் விஜய்க்காக ஏற்கனவே தான் போட்டு வைத்திருந்த 12 டியூன்களை அனிருத் முருகதாசுக்கு போட்டுக் காட்டியுள்ளார்.

அதைக் கேட்ட ஏ.ஆர். முருகதாஸ், உடனே இந்தப் படத்திற்கும் நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று அனிருத்தை உறுதி செய்துள்ளாராம்.

கத்திப் படத்தைப் போன்று இந்தப் படத்திலும் டக்கரான இசையில் நிச்சயம் ரசிகர்களை மகிழ்வித்து விடுவார் அனிரூத். அதிலும, கத்திப் பட வில்லனுக்குப் போட்ட பிஜிஎம் இருக்கே அடடா. செம்ம.

மேலும், இந்தப் படத்தில் விஜய் ஒரு இசைக் கலைஞனாக நடிக்கிறார். மேலும் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளும் அதிகமாக இருக்குமாம்.

படத்தில் விஜய் ஒரு இசைக்கலைஞர் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

மறுபக்கம் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி ஹீரோயினிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது கொசுறு தகவல்.