அப்புக்குட்டி, எம்.எஸ்.பாஸ்கர், பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காகித கப்பல்.
இதில் தல அஜித்தின் தீவிர ரசிகர் மட்டுமின்றி அவரது அன்புக்கு பாத்திரமானவர்களில் ஒருவர் அப்புக்குட்டி.
அப்புக்குட்டிக்காக தனது சொந்த செலவில் போட்டோஷூட் நடத்திய அஜித், தனது படங்களிலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
மேலும் அப்புக்குட்டியின் திருமணத்தையும் அஜித் விரைவில் நடத்தி வைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடித்த 'காகித கப்பல்' திரைப்படத்தின் பாடல் க்ளிப்ஸ் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த பாடலில் முழுக்க முழுக்க தலபுராணம்தான் உள்ளது என்பதால் தல அஜித் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த பாடலில் 'தல'ய பார்த்தால் தன்னம்பிக்கை வரும் என்ற வரிகள் அப்புக்குட்டிக்கு மட்டுமின்றி அனைவருக்குமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை எஸ்.சிவராமன் என்பவர் இயக்கியுள்ளார். வி.ஏ.துரை தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிஷாந்த் இசையமைத்துள்ளார்.
