இயக்குனர் ராசு ரஞ்சித், இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'தீதும் நன்றும்'. ஹரி சில்வெர் ஸ்கிரீன்ஸ் சார்லஸ் இம்மானுவேல் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஈசன் ஹீரோவாக நடித்துள்ளார்.
இயக்குனர் ராசு ரஞ்சித், இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'தீதும் நன்றும்'. ஹரி சில்வெர் ஸ்கிரீன்ஸ் சார்லஸ் இம்மானுவேல் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஈசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோவாக ராசு ரஞ்சித் மற்றும் ஹீரோயினாக லிஜோ மோல் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், இன்பா ரவிக்குமார், சந்தீப்ராஜன், காலயன் சத்யா, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு? அவசர அவசரமாக மருத்துவமனை விரைந்த விஜய்சேதுபதி! தற்போதைய நிலவரம் என்ன?
முதல் படத்திலேயே, தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் ராசு ரஞ்சித். ரசனையுடன் நட்பு, காதல், துரோகம் என எல்லா வற்றையும் உள்ளாடக்கிய படமாக உருவாகி இருக்கிறது 'தீதும் நன்றும்' திரைப்படம். சிவாவாக ராசு ரஞ்சித், தாஸாக ஈசன் இருவரும் தத்ரூபமாக தங்கள் பாத்திரங்களில் வாழ்ந்திருக்கின்றனர். முகமூடி அணிந்துக் கொண்டு கொள்ளையடிக்கும் முதல் காட்சியிலேயே தங்கள் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமாக அஸ்திவாரம் போட்டுள்ளனர்.

ராசு ரஞ்சித் ஹீரோவாக நடித்திருப்பதுடன் இயக்குனராகவும் பொறுப்பேற்று கனகச்சிதமாக அசத்தல் திரைக்கதையுடன் படத்தை கொண்டு சென்றிருக்கிறார். வடசென்னை நண்பர்களின் பாசம், அவர்கள் செய்யும் தவறு, அதில் இருந்து திருந்தி வாழ நினைக்கும் போது ஏற்படும் பிரச்சனை என. விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர்.
மேலும் செய்திகள்: இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்து..!
அபர்ணாவின் நடிப்பும் லிஜோ மோலின் நடிப்பும் அசத்தல். கச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர். ஆனால் ஏற்றி விட்ட ஏணியை மறந்த கதையாக, அபர்ணா முரளி, மற்றும் லிஜோ மோல் இருவருமே இந்த படத்தில் நடித்த பிறகே, தமிழ் 'சூரரை போற்று' மற்றும் மற்ற பட வாய்ப்புகளை கைப்பற்றினர். இதை கூட நினைத்து பார்க்காமல் பெரிய நடிகை என்கிற அந்தஸ்து வந்த பின்னர், சிறிய பட்ஜெட்டில் எடுத்த தன்னுடைய முதல் பட புரொமோஷன்களில் கலந்து கொள்ளாமல், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை கலங்க வைத்து விட்டனர்.

நீங்கள் அவர்களை மறந்தால்... நாளை உங்களை மக்கள் மறந்து விடுவார்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள் என விமர்சகர்கள் நடிகைகளுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
