இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்து..!
'பரியேறும் பெருமாள்', என்கிற தரமான படத்தை தமிழ் திரையுலகிற்கு தந்த இயக்குனர் மாரி செல்வராஜின் மனைவி, திவ்யா செல்வராஜுக்கு கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. மாரிசெல்வராஜ் குழந்தையை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி' உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி, பின்னர் இயக்குனராக மாறியவர் மாரிசெல்வராஜ்.
இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரோடக்சன் மூலம் தயாரித்திருந்தார்.
2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு, மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி, பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. மாரி செல்வராஜையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது இந்த திரைப்படம்.
இந்நிலையில் இவர் தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' படம், விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான 'கண்டா வரச்சொல்லுடா', 'பண்டாரத்தி புராணம் ', மற்றும் நேற்று வெளியான 'திரௌபதியின் முத்தம்' ஆகிய மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மாரிசெல்வராஜ் - திவ்யா தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார் திவ்யா மாரிசெல்வராஜ்.
இதையடுத்து இவருக்கு மிக பிரமாண்டமாக சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவரைகளை வாழ்த்தியுள்ளனர்.
இயக்குனர் மாரிசெல்வராஜ் மனைவிக்கு அழகிய குழந்தை ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாரிசெல்வராஜ் குழந்தையுடன் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.