சினிமாவுக்கு ஷார்ட் பிரேக் – கணவருடன் சுற்றுலா சென்ற அபர்ணா தாஸ்!

Aparna Das' honeymoon photo with her husband : நடிகை அபர்ணா தாஸ் கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

Aparna Das' honeymoon photo with her husband is going viral rsk

Aparna Das' honeymoon photo with her husband : விஜய் நடிப்பில் திரைக்கு வந்த பீஸ்ட் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அதுவும் ஷாப்பிங் மால் ஹைஜாக் காட்சியில் இடம் பெற்றிருப்பார். இதில் அவரது நடிப்பு பெரியளவில் பேசப்படவே கவின் நடித்து வெளியான டாடா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நிஜன் பிரகாஷன் தான் அபர்ணா தாஸின் முதல் படம். மலையாள சினிமா மூலமாக சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்தார். ஓமன் நாட்டில் செட்டிலான மலையாள குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு மகளாக பிறந்தவர் அபர்ணா தாஸ். கல்லூரி படிப்பை முடித்த அபர்ணா தாஸ் அக்கவுண்டண்டாக பணியாற்றியிருக்கிறார். இதே போன்று ஒரு சில மேகசைன்களில் மாடலாகவும் இருந்திருக்கிறார்.

இதையடுத்து மஸ்கட்டியிலும் வேலை பார்த்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவருக்கு சினிமா வாய்ப்பு வரவே மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். தற்போது 29 வயதாகும் அபர்ணா தாஸ் கடந்த ஆண்டு தீபக் பரம்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கூட சினிமாவில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ஆனந்த் ஸ்ரீபாலா என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

இப்போது எந்தப் படமும் கைவசம் இல்லாத நிலையில் கணவரை அழைத்துக் கொண்டு ஹாயாக ஹனிமூனுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். ஹனிமூனுக்கு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் உள்ள பாலிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு ஹனிமுனுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios