Aparna Das celebrated her birthday with Vijay: பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் படப்பிடிப்பின் போது தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது, விஜய் அவருக்கு கேக் ஊட்டி விட்டுள்ளார்.
வளர்த்து வரும் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியான பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், இந்த படம் வசூலில் நல்ல சாதனை படைத்துள்ளது.
பீஸ்ட் விமர்சனங்களை தாண்டி வசூல் பெற்றதா..?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்:

இந்த படத்திற்கு பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. இது கூர்கா, மணி ஹெய்ஸ்டிங் படங்களின் காப்பி என்று கூட சொல்லப்பட்டது. இருப்பினும், விஜய்யின் ரசிகர்கள் வித்தியாசமான விஜய்யை இந்தப்படத்தில் பார்க்கலாம் என்றும், காமெடியில் கலந்து கட்டி அடிக்கும் நெல்சன், தற்போது ஆக்ஷனில் பின்னி பிடலெடுத்துள்ளதாக படத்தை கொண்டாடி வருகின்றனர்.
கதைக்களம்:

அனிருத்தின் இசையில் வெளியான அரபிக் குத்து பாடம் ஏற்கனவே வேற லெவலில் ஹிட்டாகி விட்டன. இந்த பாடல் யூட்யூப்பில் மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. ஒரு மாலில் கடத்தப்படும் பொதுமக்களை விஜய் காப்பாற்றுவதாக கதைக்களத்தை படம் கொண்டிருந்தது.
ஓடிடி ரிலீஸ்:

இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் மே 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது. சக்சஸ் பார்ட்டி கொடுத்த விஜய் ஆனால் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய், படக்குழுவினருக்கு தனது வீட்டில் சக்சஸ் பார்ட்டிக் கொடுத்திருந்தார். நெல்சன் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
அபர்ணாதாஸ்..கேக் ஊட்டிய விஜய்:

இதையடுத்து, பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் படப்பிடிப்பின் போது தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது, அவருக்கு படக்குழுவினர் கேக் வெட்டினர்., இன்ப அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அபர்ணாதாஸ் துள்ளிக்குதித்தார். தொடர்ந்து, அவருக்கு நெல்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் கேக் ஊட்டினர். இந்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
