- Home
- Gallery
- ஆரம்பிக்கலாமா..? விசித்திரன் படம் பார்ப்போருக்கு தங்க சங்கிலி பரிசு...அறிவிப்பு கேட்டு குஷியான ரசிகர்கள்..
ஆரம்பிக்கலாமா..? விசித்திரன் படம் பார்ப்போருக்கு தங்க சங்கிலி பரிசு...அறிவிப்பு கேட்டு குஷியான ரசிகர்கள்..
Visithiran movie: இன்று முதல் 10 நாட்களுக்கு விசித்திரன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தங்க சங்கிலி பரிசு வழங்கப்படும் என்று யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

visithiran
கடந்த 2018 ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜோசப்’ படத்தின் தமிழ் ரீ மேக் ''விசித்திரன்'' திரைப்படம். ஜோசப் (Joseph) படத்தை இயக்கிய பத்மகுமார் தான் இந்த விசித்திரன் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில், ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார்.
visithiran
இந்த படத்திற்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து சுமார் 18 கிலோ வரை எடையை குறைத்து நடித்திருக்கிறார். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடிகைகள் பூர்ணா மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
visithiran
மேலும் இந்த படத்தில் பகவதி பெருமாள், இளவரசு, ஜார்ஜ் மர்யான், அனில் முரளி பாண்டி ரவி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தில் காவல்துறை அதிகாரி சுரேஷ் , தனது மனைவி மற்றும் மகளின் இறப்பிற்கு காரணமான கொலையாளியை எப்படி புலானாய்வு செய்து கண்டு பிடிக்கிறார்கள் அதில் இருக்கும் சாவல்களும் புலனாய்வுகளும் என்ன என்பதை திரை கதை சொல்கிறது.
visithiran
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை புக்மை ஷோ மூலமாக புக்கிங் செய்து அந்த டிக்கெட்டை www.yourbackers.org என்ற இணையத்தில் மூலம் பதிவேற்றம் செய்ததுடன் வரும் லிங்கை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும். அதிகமாக பகிரரும் ரசிகர்கள் தேர்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.