பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சி துவங்கி, இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய 16  போட்டியாளர்களில், தற்போது பார்த்திமா பாபு வெளியேற்றப்பட்டதால், 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சி மீது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனை பற்றிய மூன்று ப்ரோமோ வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் இன்றும், வெளியிடப்பட்ட இரண்டு ப்ரோமோவில், சாக்ஷி கவினுடன் லாஸ்லியா பேசுவதை வைத்து ஒரு பிரச்சனை செய்தார். அதை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் கொடுத்த டாஸ்க்கில் தன்னை சப்போர்ட் செய்து யாரும் பேசவில்லை என கூறி சித்தப்பு சரவணன் கோபத்தில் கத்தியது வெளியானது.

மூன்றாவது ப்ரோமோ வெளியிட எந்த பிரச்னையும் கிடைக்கவில்லை என்பதால், அனைவரும் குழுவாக அமர்ந்து "எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்" என்கிற பாடலையும்... இதற்கு முன் பிக்பாஸ் வீட்டில் நடந்த சண்டை காட்சிகளை தொகுத்து, சுவாரஸ்யமாக வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.