anushka work in petrol bunk
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அனுஷ்கா ஹைதராபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பணியாற்றியுள்ளார் இதனை உறுதிபடுத்துவது போல் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி;
ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மீமு சைதம்’ நிகழ்ச்சி ரொம்பவே பிரபலம். லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் சிறப்பு விருந்தினர்களாக மோகன் பாபு, ராணா, ரகுல், நாணி, ராஷி, லாவண்யா என தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடுக்கப்படும் சவால், வெவ்வேறு பணிகள் செய்து பணம் ஈட்டவேண்டும் என்பதே... இதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம் சமூகப் பணிகளுக்காகச் செலவிடப்படுகிறது.
முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக பிரபல நடிகையும், தொகுப்பாளருமானலட்சுமி மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வேலை பார்த்த அனுஷ்கா:
மேலும் இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அனுஷ்கா கலந்துகொண்டுள்ளார். அதன்படி நேற்று (பிப்ரவரி 4) ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புபவராகப் பணியாற்றியுள்ளார். அனுஷ்காவைக் காண்பதற்காகவே பெரும்பாலானோர் அந்த பங்கிற்கு வந்து பெட்ரோல் நிரப்பிச் சென்றனர். இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
