ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் உள்ளிட்டோர் நடித்த “நிசப்தம்“ படம். இதில் ரெண்டு படத்துக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். தமிழில் இந்தப் படத்துக்கு 'நிசப்தம்' எனப் பெயரிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 'நிசப்தம்' என்ற தலைப்பை ஏற்கனவே ஒருவர் வாங்கி வைத்துள்ளதால், தெலுங்கில் நிசப்தம் என்றும், தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயருடனும் வெளியாகவுள்ளது.

 

 வெளிநாட்டு கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் க்ரைம் திரில்லர் என்பது டீசரை பார்க்கும் போதே தெளிவானது.  படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், ஏப்ரல் மாதமே திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா சூழலல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் படம் பெரிய தொகைக்கு  படத்தை அமேசான் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 2ம் தேதி படம் அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் வெளியாக உள்ளது. 

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இன்று டிரெய்லர் வெளிவந்திருக்கிறது. தற்போது நிசப்தம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அனுஷ்கா வாய்பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத பெண்ணாக நடித்து இருக்கிறார். டிரெய்லரின் ஆரம்பத்தில் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் ஒரு ஓவியத்தை தேடி அனுஷ்கா மற்றும் மாதவன் இருவரும் செல்கிறார்கள். அதன் பின்னர் போலீஸ் விசாரணை, தேடல் என பல காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. திரில்லரான டிரெய்லர் இதோ...