பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அனுஷ்காவின் மார்க்கெட் குறையவில்லை, தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட அனுஷ்கா சர்மா நடித்த லால் கப்டான், ஹவுஸ்புல் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

உடைகளின் காதலியான அனுஷ்கா சர்மா, அவ்வப்போது மார்டன் உடைகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் போட்ட பார்ட்டி டிரஸ் ஒன்று திரையுலகினரை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த பேஷன் விரும்பிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

மும்பையில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி இந்தியா வந்துள்ளார். மும்பையில் தங்கியுள்ள கேட்டி பெர்ரியை கவுரவிப்பதற்காக, நடிகர் கரண் ஜோஹர் பார்ட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாலிவுட்டின் மொத்த அழகிகளான ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், கரீஷ்மா கபூர், மல்லிகா அரோரா, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அந்த பார்ட்டியில் பங்கேற்பதற்காக அனுஷ்கா சர்மா அணிந்து வந்த வெள்ளை நிற உடை அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. வெள்ளை நிற ஷார்ட் டிரஸில் மிகப்பெரிய பஃப் கை வைத்த உடையில் அனுஷ்கா சர்மா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் க்யூட், செக்ஸி, ஹாட் என புகழ்ந்து வருகின்றனர்.