நடிகர் நடிகைகள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. சினிமா வாய்ப்பு தற்காலிகமானது . எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் நிரந்தரமான வருமானம் வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையான தொழிலில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தான் நடிகை அனுஷ்காவும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்.

நடிகை தமன்னா ஆன்லை மூலம் நகை வியாபாரம் செய்து வருகிறார். டாப்சி திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இலியானா துணிக்கடையையும் ரகுல் பிரீத்சிங்  உடற்பயிற்சி நிலையங்களையும் ஸ்ரேயா அழகு நிலையத்தையும் நடத்தி வருகிறார்கள்.நடிகை அனுஷ்கா ரியல் எஸ்டேடில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திருப்பதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா ,காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். அனுஷ்காவுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஹைத்ராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டை அனுஷ்கா வாங்கி இருக்கிறார். தெலுங்கானா பிரச்சனை தலை தூக்கிய போது இனி சொத்துக்களின் விலை இறங்கு முகமாக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் பயமுறுத்தியதும் பத்துக்கோடி மதிப்புள்ள சொத்தை வெறும் ஐந்து கோடிக்கு விற்றுவிட்டார். அதே போல் விசாகபட்டினத்திலும் நிறைய சொத்துக்களை வாங்கி போட்டிருந்தார்.


முதலமைச்சராக இருந்த  சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக்கும் முயற்சியில் இறங்கியதால் சொத்துக்கள் விலை தாறுமாறாக குறையும் என தப்புக்கணக்கு போட்டவர் பெரும்பாலான சொத்துக்களை விற்பனை செய்து விட்டார் அனுஷ்கா. விசாகப்பட்டினம் அமராவதி இந்த இரண்டு இடத்திலுமே தற்போது விலை எகிறிப்போய் இருக்கிறது. ஏற்கனவே விற்ற விலையையும் தற்போதுள்ள விலையை நினைத்து நினைத்து தினந்தோறும் நொந்து போய்  மனம் வெந்து போய் இருக்கிறராம் அனுஷ்கா

TBalamurukan