படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மஞ்சு வாரியரின் பாத்திரம் வயதான தோற்றத்தில்தான் இருக்கும். அதுவுமின்றி இளம் வயது தனுஷுக்கு ஜோடியாக வேறு நடிகை நடிக்கவைப்பட்டார். இது தனது இமேஜைக் காலி செய்துவிடும் என்று அனுஷ்கா நினைத்ததாலேயே இப்படத்தை கொஞ்சமும் யோசிக்காமல் நிராகரித்ததாகத் தெரிகிறது.
தமிழில் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அசுரன் படம் இந்தி, தெலுங்கு,கன்னட மொழிகளில் ரீமேக் ஆக உள்ள நிலையில் அதன் தெலுங்கு ரீமேக் நாயகி வேடத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.
கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸான படம் ‘அசுரன்’. தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவரது மனைவியாக மஞ்சு வாரியர் நடித்தார். டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் என ஏராளமான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ராமர் எடிட்டராகப் பணியாற்றினார்.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சாதி பிரச்சினை, பஞ்சமி நிலங்கள் குறித்துப் பேசியது. படம் பார்த்த எல்லோருமே இந்தப் படத்தைக் கொண்டாடினர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் இந்தி நடிகர்களும் வெற்றிமாறன் மற்றும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிவசாமி எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த முதல் படம் என்ற சாதனையை ‘அசுரன்’ நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு மற்றும் டி.சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை அனுஷ்காவை அணுகியுள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மஞ்சு வாரியரின் பாத்திரம் வயதான தோற்றத்தில்தான் இருக்கும். அதுவுமின்றி இளம் வயது தனுஷுக்கு ஜோடியாக வேறு நடிகை நடிக்கவைப்பட்டார். இது தனது இமேஜைக் காலி செய்துவிடும் என்று அனுஷ்கா நினைத்ததாலேயே இப்படத்தை கொஞ்சமும் யோசிக்காமல் நிராகரித்ததாகத் தெரிகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 20, 2019, 5:05 PM IST